TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 22 , 2022 577 days 289 0
  • அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெறத் தகுதியுடைய அனைவரும் ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஒரு சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
  • பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா PETA இந்தியா அமைப்பின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபர் என்ற பட்டத்தினைப் பெற்றுள்ளார்.
    • விலங்குகளை நன்முறையில் நடத்துவதற்கான மக்கள் சமுதாயம் (PETA) என்பது ஒரு அமெரிக்க விலங்கு உரிமைகள் சார்ந்த இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
  • மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குஜராத் மாநிலத்தின் வடோதராவில் உள்ள கதி சக்தி விஸ்வ வித்யாலயாவின் வேந்தராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
    • இவர் இந்த நிறுவனத்தின் முதல் வேந்தராகத் திகழ்வார்.
  • “The Light We Carry: Overcoming In Uncertain Times” என்ற தலைப்பிலான நூலானது மிச்செல் ஒபாமா அவர்கள் எழுதிய ஒரு புத்தகமாகும்.
  • உலக தடகளத் தரவுகளின் படி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2022 ஆம் ஆண்டில் தடகளத் துறையில் எழுதப் படும் வீரர்களைப் பற்றிய கட்டுரைகளில் அதிகம் குறிப்பிடப் பட்டவர் ஆவார்.
    • இவர் இப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ஜமைக்காவின் ஸ்பிரிண்ட் (மின்னல் வேக வீரர்) ஜாம்பவான் உசைன் போல்ட்டினை விஞ்சியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்