2022 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதி அன்றைய நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள காகிதப் பணங்களின் (NiC) வருடாந்திர வளர்ச்சி அளவானது 7.98 சதவீதம் அதிகரித்து, ரூ.31.92 லட்சம் கோடியாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது பணமதிப்பு இழப்பிற்கு முந்தையக் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2016 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் நாளன்று பதிவான ரூ.17 லட்சம் கோடியிலிருந்து 72 சதவீதம் (மதிப்பு மற்றும் 45% அளவு அதிகரிப்பு) அதிகரித்துள்ளது.
Viacom18 மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது பாரீஸ் நகரில் நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான பிரத்தியேக ஊடக உரிமைகளையும், கேங்வான் 2024 ஆம் ஆண்டு குளிர்கால இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஒரு பிரத்தியேகம் சாராத உரிமைகளையும் வங்க தேசம், பூடான் இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்காகப் பெற்றுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழுவானது, (IOC) அறிவித்து உள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆனது ஜூலை 26 ஆம் தேதியன்று தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பாரீஸ் நகரில் பிரான்சு அரசினால் நடத்தப் பட உள்ளது.
2023 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதிற்கு 'நாட்டு நாட்டு' என்ற பிரபலத் தெலுங்குப் படப் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆஸ்கார் அகாடமி விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப் பாடலாக நாட்டு நாட்டு என்ற பாடல் ஆனது.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹேமந்த் குப்தா, புது டெல்லி சர்வதேச நடுவர் மையத்தின் (NDIAC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிறுவனமயமாக்கப்பட்ட ஒரு நடுவண் மன்றத்தினைக் கட்டமைப்பதற்கான ஒரு சுயாதீனமான மற்றும் தன்னாட்சி கட்டமைப்பை உருவாக்குவதற்காக புது டெல்லி சர்வதேச நடுவர் மையமானது உருவாக்கப்பட்டது.