TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 30 , 2022 569 days 320 0
  • முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் ஆனது குவாலியர் கௌரவ் திவாஸ் ஆக கொண்டாடப்பட உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அறிவித்துள்ளார்.
  • போபாலில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு மகளிர் தேசியக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் லோவ்லினா போர்கோஹைன் மற்றும் நிகத் ஜரீன் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு FINA உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் இந்திய நீச்சல் வீராங்கனை சாஹத் அரோரா ஒரு தேசியச் சாதனையினை (1 நிமிடம், 13.13 வினாடிகள்) படைத்துள்ளார்.
  • இந்திய சைக்கிள் வீராங்கனை ஸ்வஸ்தி சிங் 2022 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க 30வது ஏகலப்ய புரஸ்கார் விருதினைப் பெற்றுள்ளார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் 19வது ஆளுநர் C. ரங்கராஜன் “Forks in the Road: My Days at RBI and Beyond” என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்