குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் தெலுங்கானாவில் அமைந்துள்ள இரண்டு கோவில்களில் PRASHAD என்ற திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்வதற்கான செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தார்.
கர்நாடகாவில் உள்ள தேவனஹள்ளியில் அமைக்கப்பட உள்ள மத்தியத் துப்பறிவுப் பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
கொல்கத்தாவில் உள்ள ஜோகா எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய தண்ணீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தை (SPM-NIWAS) பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
10 நாட்கள் அளவிலான முதலாவது பேக்கல் சர்வதேசக் கடற்கரைத் திருவிழாவானது கேரளாவின் காசர்கோடு எனுமிடத்தில் நடைபெற்றது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி எனுமிடத்தில் உலகத் தரம் வாய்ந்த கயாக்கிங்-கேனோயிங் (சிறு படகோட்டப் போட்டி) அகாடமி அமைக்கப்பட உள்ளது.
இந்த அகாடமியில், உத்தரகாண்ட் மாநிலத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பங்கேற்று விளையாடுவதற்காக வேண்டி, இலவசப் பயிற்சியுடன் சேர்த்து தேவையான அனைத்து வசதிகளையும் அளித்துத் தயார் படுத்தப் படுவார்கள்.
டெஸ்லா மற்றும் ட்விட்டர் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது நிகர சொத்து மதிப்பில் இருந்து 200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் ஆனார்.