கோவா மாநிலத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மோபா சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னாள் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அவர்களின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
வாரணாசி கேன்ட் இரயில் நிலையம் ஆனது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் நிர்ணய ஆணையத்தின் 5 நட்சத்திர தரச் சான்றிதழுடன் கூடிய 'சரியான உணவு வழங்கீட்டு முறையினைப் பின்பற்றும் நிலையம்' என்ற விருதைப் பெற்றது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் நிர்ணய ஆணையமானது, நிலையான உணவுச் சேமிப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளைக் கடைபிடிக்கும் இரயில் நிலையங்களுக்கு இந்தச் சான்றிதழினை வழங்குகிறது.