ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டு நாட்கள் அளவிலான 83வது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டினைத் துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டினைச் சேர்ந்த சதுரங்க வீரர் M. பிரனேஷ், 2022-23 ஆம் ஆண்டு ரில்டன் கோப்பையை வென்று இந்தியாவின் 79வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
பிரித்தானிய இளையோர் ஓபன் போட்டியின் 15 வயதிற்குட்பட்ட மகளிருக்கான போட்டிப் பிரிவில் இந்தியாவின் ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
மத்திய அரசின் துணை நிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது, "2023 ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினத்திற்காக, "உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்" என்ற கருத்துருவினை வெளியிட்டது.
S.S.ராஜமௌலியின் RRR திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த அசல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதினை வென்றது.
ரீநியூ பவர் (ReNew Power) என்ற நிறுவனமானது, இந்தியாவின் முதல் 3x பிளாட்ஃபார்ம் காற்றாலை உற்பத்தி அலகுகளை கர்நாடகாவின் கடக் எனுமிடத்தில் நிறுவியுள்ளது.