இணையவழி விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியாவின் முதல் சிறப்பு மையம் (CoE) ஆனது மேகாலயாவின் ஷில்லாங் நகரில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறுவப்படும்.
ஜம்முவில் நடைபெற்ற தேசிய ஸ்கே சாம்பியன்ஷிப் போட்டியில் தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த 11 வயது ஃபலாக் மும்தாஜ் என்பவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்தியாவின் G-20 அமைப்பின் தலைமைப் பதவியின் ஓர் அங்கமாக, ஜனவரி 22 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ள வணிகம்-20 (B-20) தொடக்கக் கூட்டம் ஆனது குஜராத்தில் உள்ள காந்தி நகரில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பிரிட்டிஷ் நாட்டின் கருவூலத்திற்கான தலைமைப் பொருளாதார ஆலோசகர், கிளேர் லோம்பார்டெலி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) புதிய தலைமைப் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த முப்பது ஆண்டுகளில், முதல் முறையாக இந்தப் பொறுப்பினைப் பெற்ற முதல் பிரிட்டிஷ் நபர் இவரே ஆவார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் சுல்தான் அல்-ஜாபர் இந்த ஆண்டு நடைபெற உள்ள 28வது பங்குதாரர்கள் மாநாட்டின் பருவநிலைப் பேச்சுவார்த்தை கூட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.