TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 28 , 2018 2345 days 891 0
  • வரும் கல்வி ஆண்டிலிருந்து தில்லி அரசுப் பள்ளிகளில் “மகிழ்ச்சிக்கான பாடத்திட்டம்” அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தப் பாடத்திட்டத்தில் தியானம், தார்மீக விழுமியங்கள் மற்றும் மனஞ்சார்ந்த பயிற்சிகள் இடம் பெறும். இவற்றின் முக்கிய நோக்கம் ‘Sarvagun Sampann’ (பல்துறை) தொழில் முறைகள் மற்றும் மனிதர்களை உருவாக்குவதாகும்.
  • புதுதில்லியில் மத்திய வர்த்தகத் துறையின் புதிய வளாகமான வனிஜியா பவனி (Vanijya Bhawan)-ற்கு பிரதம அமைச்சர் அடிக்கல் நாட்டினார். நவீன வசதிகளுடன் கூடிய முற்றிலும் காகித பயன்பாடற்ற அலுவலகமாக இது விளங்கும்.
  • கடல் வழி மற்றும் கப்பற் கட்டும் துறைக்கான திறன் வளர்ச்சியில் நன்கு நிதி வசதியுடன் கூடிய ஸ்டார்ட் அப் (Start Up) நிறுவனமான, கடல் வழி மற்றும் கப்பற் கட்டுதலுக்கான சிறந்த மையம், மும்பையில் 6 ஆய்வுக் கூடங்கள் மற்றும் விசாகப்பட்டின வளாகத்தில் 18 ஆய்வுக் கூடங்கள் என மொத்தம் 24 ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் முதல் வகையான கட்டமைப்பு ஆகும்.
  • உத்தரக்காண்ட்டில் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான அரசு, ஆற்றில் செல்லும் வெள்ளைப் படகுகள், பாராகிளைடிங் மற்றும் இதர தண்ணீர் சம்பந்தமான விளையாட்டுகளுக்கு, அது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும் வரை, இந்த விளையாட்டுகளுக்கு அம்மாநில உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
  • மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையமானது, தில்லியில் உள்ள ஜகத்பூரா கிராமத்தை தூய்மை இயக்க கிராமமாகத் தத்தெடுத்துள்ளது.
  • புதுதில்லியின் சிஐஇடி (CIET)-ல் உள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தில் (NCERT - National Council of Educational Research and Training) 3 நாள் தேசிய யோகா ஒலிம்பியாட் (National Yoga Olympiad) தொடங்கி வைக்கப்பட்டது. இது NCERT-ன் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டு தேசிய யோகா ஒலிம்பியாட் ஆகும். இந்நிகழ்ச்சியின் போது நாடகத்தின் மகிழ்ச்சி (Joy of theatre) மற்றும் சங்கீத பயிற்சித் தொகுப்புகள் (Sangeet Training Package) ஆகிய இரண்டு புத்தங்கள் வெளியிடப்பட்டன.
  • தற்போது ஓசாகா கோபேவில் (Osaka-Kobel)-ல் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொதுச் செயலாளரான டி.ஆம்ஸ்ட்ராங் சங்சன் (IFS: 1997), ஐஸ்லாந்து குடியரசு நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 10வது பயங்கரவாத எதிர்ப்பிற்கான கூட்டுப் பணிக் குழுக் கூட்டம், யுக்தி ரீதியிலான நட்பு நாடுகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே புது தில்லியில் நடைபெற்றது. அடுத்த பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் 2019-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்