TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 23 , 2023 545 days 315 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையமானது ஹைதராபாத்தில் உள்ள ஜீனோம் பள்ளத்தாக்குப் பகுதியில் திறக்கப் பட்டுள்ளது.
  • ESAF சிறு நிதி வங்கியானது, நிதி உள்ளடக்க இலக்கினை அடையும் முயற்சியினை மேற்கொள்வதற்காகவும், உள்ளார்ந்த வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்காகவும் ஆற்றிய பங்களிப்பிற்காக வேண்டி 2022 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க நிதி உள்ளடக்க இந்தியா விருதுகளைப் பெற்றுள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கல்வி தினத்தை ஆப்கானிய சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளது.
  • ஹிமாலயன் கண்புரை நோய்த் திட்ட இணை நிறுவனரான டாக்டர் சந்துக் ரூயிட், பஹ்ரைனின் உயர்மட்ட குடிமை விருதான மனித நேயச் சேவைக்கான ISA விருதினை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்