TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 5 , 2023 532 days 330 0
  • PVR சினிமாஸ் நிறுவனமானது, சென்னையில் உள்ள விமான நிலைய வளாகத்தில் இந்தியாவின் முதலாவது பல்லரங்கத் திரையரங்கத்தினைத் தொடங்கியுள்ளது.
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழான முதலாவது G20 சர்வதேச நிதிக் கட்டமைப்புப் பணிக் கட்டுப்பாட்டுக் குழு கூட்டமானது சண்டிகரில் நடைபெற்றது.
  • 74வது குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்ற குஜராத் மாநிலத்தின் காட்சி வாகனமானது, 'மக்கள் விருப்பம்' என்ற பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • கௌதம் அதானியின் நிறுவனமானது, அதன் கார்பன் நீக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசியாவிலேயே முதல்முறையாக, ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலம் மூலம் இயக்கப்படும் சரக்குந்துகளைச் சுரங்கத் தளவாடங்கள் மற்றும் அதன் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்