TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 12 , 2023 525 days 325 0
  • தெலுங்கானா மாநில அரசானது, இந்தியாவில் உள்ள நிலையானப் போக்குவரத்து அமைப்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றி நான்கு மாபெரும் தொகுப்புகளை அமைப்பதற்கான தெலுங்கானா போக்குவரத்துப் பள்ளத்தாக்குப் பகுதி திட்டத்தினை (TMV) அறிவித்துள்ளது.
    • இது இந்தியாவின் முதலாவது போக்குவரத்துப் பள்ளத்தாக்குப் பகுதி திட்டமாகும்.
  • ஜார்க்கண்டில் அமைக்கப்பட உள்ள இந்தியாவின் ஐந்தாவது நுண் யூரியா உற்பத்தி ஆலைக்குச் சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
  • தேசியக் கடற்கரைத் தளக் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அதன் தொடக்க சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கேரள அணி வென்றது.
  • இந்திய அரசாங்கம் தனது 33.44% பங்குகளுடன் Vi (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் மிகப்பெரியப் பங்குதாரராக மாற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்