TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 2 , 2018 2209 days 654 0
  • போஸ்டான் கன்ஸல்டிங் குரூப் மற்றும்com ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின்படி, நியூயார்க், பெர்லின் மற்றும் பார்சிலோனா ஆகிய நகரங்களை விட லண்டன் நகரம், உலகில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மிகவும் விரும்பும் நகரமாக உள்ளது.
    • இதற்கிடையில், நாடுகளுக்கிடையேயான ஆய்வின்படி ஒட்டுமொத்தமாக ஐக்கிய ராஜ்ஜியம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஐக்கிய ராஜ்ஜியம் 2014-ல் இரண்டாவது இடத்தில் இருந்தது.
  • பெங்களுரூவை அடிப்படையாகக் கொண்ட சுமத்ரா குரூப் என்ற நிறுவனம் மகேந்திரசிங் தோனியைத் தனது முதலாவது நிறுவனத் தூதராக நியமித்துள்ளது. இவர் அந்நிறுவனத்தின் அடையாளமாக அனைத்து தேசியப் பிரச்சாரங்களிலும் பல ஆண்டுகளுக்கு ஈடுபடுவார்.
  • அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மிச்சிகன் மைக்ரோ மோட் என்ற சிறிய கணினியை வடிவமைத்துள்ளனர். இது3 மி.மீ * 0.3 மி.மீ என்ற அளவிலும் அரிசி தானியத்தை விட முற்றிலும் சிறிய அளவிலும் உள்ளது.
    • இந்த மிகச்சிறிய சாதனங்களில் ஏற்கெனவே உள்ள நிரலாக்க மற்றும் தரவுகள், இச்சாதனங்கள் அணைந்தவுடன் இவை அனைத்தும் அழிந்துவிடும்.
  • தமிழ் நாட்டின் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில்பெட்டித் தொழிற்சாலையானது முதன் முறையாக துருப்பிடிக்காத எஃகுடன் கூடிய 3 கட்ட ஆற்றல் மிக்க மெய்ன்லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் (MEMV-Mainline Electric multiple unit) கொண்ட 8 இரயில் பெட்டிகளை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
    • MEMU என்பது புறநகர் இரயில் அமைப்பாகும். இது உள்நகரங்களில் குறைந்த தொலைவு பயணம் செய்யும் பயணிகளின் தேவையை நிவர்த்தி செய்கிறது.
  • இந்திய இரயில்வேயானது, மேற்கு மத்திய இரயில்வே, மத்திய இரயில்வே, கிழக்கு இரயில்வே மற்றும் தென் கிழக்கு மத்திய இரயில்வே ஆகிய நான்கு மண்டலங்களிலும் ஆளில்லா லெவல் கிராஸிங்கை (UMLC – Unmanned level crossing) முற்றிலும் நீக்கியுள்ளது. இந்த நான்கு மண்டலங்களும் 11,545 கிலோ மீட்டர்கள் தொலைவுடன் ஆளில்லா லெவல் கிராஸிங் அற்ற அகல இரயில் பாதையாக உருவெடுத்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்