TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 14 , 2023 523 days 294 0
  • குருகிராமிலுள்ள ஆளில்லா விமானச் சேவை வழங்கீட்டு நிறுவனமான ஸ்கை ஏர், இந்தியாவில் ஆளில்லா விமானங்களுக்கானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் செயலியில் RuPay கடன் அட்டைச் சேவையினை வழங்கும் முதல் நிதித்தொழில்நுட்பம் சார்ந்த செயலியாக மொபிக்விக் மாறியது.
  • சல்மான் ருஷ்டி "Victory City" எனப்படும் விஜயநகர பேரரசினைப் பற்றிய கற்பனையான கதை அடங்கிய ஒரு புதிய புனைவுக் கதையினை வெளியிட்டுள்ளார்.
  • மூத்தப் பத்திரிகையாளர் டாக்டர் A.B.K. பிரசாத், பத்திரிக்கைத் துறையில் ஆற்றிய சிறப்பான பணிக்காக மதிப்பு மிக்க "2020 ஆம் ஆண்டு இராஜா இராம் மோகன் ராய் தேசிய விருதிற்கு" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • டாடா ஆலோசனை சேவை வழங்கீட்டு நிறுவனமானது ஃபார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் பாபர் அசாம், ICC ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஆண்டின் சிறந்த வீரராக அறிவிக்கப் பட்டதையடுத்து, 2022 ஆம் ஆண்டிற்கான ICC ஆடவர் கிரிக்கெட் போட்டியின் ஆண்டின் சிறந்த வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பையினை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்