G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஆனது (MeitY) உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் முதலாவது எண்ணிமப் பொருளாதாரப் பணிக் கட்டுப்பாட்டுக் குழு (DEWG) கூட்டத்தினை நடத்தியது.
மத்தியக் கலாச்சார அமைச்சகம் ஆனது மும்பை நகரில் உள்ள ஆசாத் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய சமஸ்கிருதி மஹோத்சவ் நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
இந்தியாவின் முதலாவது குளிரூட்டப்பட்ட இரட்டை அடுக்கு மின்சாரப் பேருந்து சேவையானது மும்பையின் பேருந்துச் சேவையில் சேர்க்கப்பட்டது.
மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மான்சுக் மாண்டவியா, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோன்லா மற்றும் புல்பூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள IFFCO திரவ நுண் யூரியா உற்பத்தி ஆலைகளை திறந்து வைத்தார்.
PEPSICO மற்றும் CARE ஆகிய நிறுவனங்களின் மனிதநேய உதவி வழங்கீட்டு அறக் கட்டளை அமைப்புகள் ஒன்று சேர்ந்து "She Feeds the World" என்ற ஒரு திட்டத்தினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளன.
வேளாண் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.