ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் நடைபெற்ற 13வது ஹாக்கி இந்தியா மூத்த நிலை மகளிருக்கான தேசிய சாம்பியன்ஷிப் (2023) போட்டியில் மத்தியப் பிரதேச அணி வெற்றி பெற்றது.
31வது புது டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியானது (NDWBF), புது டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கியது.
சோனாபூரில் உள்ள டோமோரா பத்தர் எனுமிடத்தில் அமைக்கப்பட உள்ள வடகிழக்கு இந்தியாவின் முதல் அழுத்தப்பட்ட (கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்ஃபைடு ஆகியவை நீக்கப்பட்ட) உயிரி எரிவாயு உற்பத்தி ஆலைக்கு அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இந்தியா டுடே இதழின் சுற்றுலாக் கணக்கெடுப்பானது 'குல்மார்க்' நகரினை சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சாகசச் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தச் செய்வதற்கான முன்னெடுப்புகளுக்காக ஜம்மு & காஷ்மீர் சுற்றுலாத் துறையினை சிறந்த சாகச சுற்றுலா விருதிற்குத் தேர்வு செய்துள்ளது.
தீவிரமான மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கும் ஒரு சட்டத்திற்கு ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது எந்த ஒரு ஐரோப்பிய நாடாலும் ஏற்படுத்தப் படும் முதல் சட்டமாகும்.