TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 4 , 2023 505 days 265 0
  • இந்தியாவில் 'தேசியப் புரத தினம்' ஆனது 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 27 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
  • உள்ளோங்காங் மற்றும் டியாக்கின் ஆகிய இரண்டு ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்கள் குஜராத்தின் GIFT நகரில் தங்களது கல்லூரி வளாகங்களை அமைக்க உள்ளன.
    • இந்தியாவில் தங்களது வளாகங்களை அமைத்த முதலாவது வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இவையே ஆகும்.
  • இந்திய விமானப்படையின் கிழக்குப் படைப் பிரிவானது, பூர்வி ஆகாஷ் எனப்படும் அதன் வருடாந்திரப் படைப் பிரிவு அளவிலான போர்க்காலத் தயார்நிலைப் பயிற்சியினை நாட்டின் வடகிழக்குப் பகுதியில் தொடங்கியுள்ளது.
    • இந்தப் பயிற்சியானது ஷில்லாங்கைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்குப் படைப் பிரிவால் மேற்கொள்ளப் பட்டது
  • நடை ஓட்டப் பந்தய வீரர்களான பிரியங்கா கோஸ்வாமி மற்றும் அக்ஸ்தீப் சிங் தேசிய நடை ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, 2023 ஆம் ஆண்டு உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றிற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்