ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனத்தின் அதானி குழுமத்திற்கு எதிரான மோசடியான பங்கு விற்பனை குறித்த ஒரு அறிக்கையைத் தொடர்ந்து உருவான சர்ச்சையை ஆய்வு செய்வதற்காக நீதிபதி அபய் மனோகர் சாப்ரே தலைமையிலான குழு ஒன்றினை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
COVID-19 பெருந்தொற்றினை எதிர்த்து வெற்றிகரமாகப் போராடியதற்காக வேண்டி இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு 2023 ஆம் ஆண்டிற்கான போர்ட்டர் பரிசு வழங்கப் பட்டு உள்ளது.
NTPC நிறுவனமானது கழிவின் அளவினைக் கட்டுப்படுத்துதல், அதன் மறு உபயோகம் மற்றும் அதன் மறுசுழற்சி மூலம் நீர் வளங்காப்பிற்கான அதன் உறுதிப்பாட்டை பறை சாற்றும் வகையில் இந்தியாவில் முதல் முறையாக காற்று மூலம் குளிரூட்டப்படும் நீராவி குளிர்விப்பான் நிறுவப்பட்ட அதி வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இயங்கும் ஆலையை ஜார்க்கண்ட்டின் வடக்கு கரன்புராவில் நிறுவியுள்ளது.