நாகாலாந்தின் முதல் பெண் அமைச்சராகப் பதவியேற்று சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் வரலாறு படைத்துள்ளார்.
சமீபத்தில் சல்ஹூதுவோனுவோ மற்றும் ஹெகானி ஜகாலு ஆகியோர் அந்த மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர்.
உலகின் மிகப் பெரிய ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் குழுமம் ஆனது, கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டில், மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் தொகுப்பு அலகினைப் பெங்களூரு அருகே நிறுவ உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் நாடானது பெண்கள் மற்றும் சிறுமிகளின் அடிப்படை உரிமைகள் பலவற்றைப் பறித்து 2023 ஆம் ஆண்டில் உலகிலேயே மிக அதிகளவில் அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துகின்ற நாடாக திகழ்கிறது.
சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியானது, வங்காள அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாக ரஞ்சிக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
இந்தப் பருவத்தில் முதல் முறையாக சிக்கிம் ரஞ்சிப் போட்டிகளை நடத்தியது.