சாவ்லான் நிறுவனமானது, தனது ஸ்வஸ்த் இந்தியா திட்டத்திற்கான உலகின் முதல் ‘கைத் தூய்மைக்கான விளம்பரத் தூதராக’ சச்சின் டெண்டுல்கரை மக்களைக் கை கழுவச் செய்வதை ஊக்குவிக்க நியமித்துள்ளது.
23வது காமன்வெல்த் சட்ட மாநாடு கோவாவில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் அளவிலான G20 அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆனது இந்தியாவின் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்றது.
மகளிருக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் கோப்பைக்கான ஆதரவு வழங்கும் நிறுவனத்திற்கான உரிமையை டாடா குழுமம் பெற்றுள்ளது.
ஏற்கனவே, டாடா குழுமம் ஆனது இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் உரிமையையும் பெற்றுள்ளது.
சமீபத்தில் பஹ்ரைனில் உள்ள மனாமா நகரில் நடைபெற்ற 33வது AFC மாநாட்டின் போது 2027 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக் கால்பந்துப் போட்டியினை நடத்தச் செய்வதற்காக சவுதி அரேபியா நாடு தேர்வு செய்யப் பட்டுள்ளது.