இந்தியாவின் முதல் வாடகை ஆம்புலன்ஸ் சேவையானது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியால் புதுதில்லியில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. வேகன் கேப் என்று பெயரிடப்பட்ட தொடக்க நிறுவனம் இச்சேவையைத் தொடங்கியுள்ளது. இச்சேவையில் அதிகரிக்கும் விபத்துகளின் எண்ணிக்கையை நினைவில் கொண்டு மருத்துவரீதியில் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை இந்நிறுவனம் நியமித்திருக்கிறது.
தொடங்கப்பட்ட 34 வருடத்திற்குப் பிறகு இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India) (Sport India) இந்திய விளையாட்டு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆணையம் (Authority) என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.