சென்னையைச் சேர்ந்த BVK பிரியாணி நிறுவனமானது, இந்தியாவிலேயே முதல் முறையாக 'பணியாட்கள் இல்லாத உணவு பெறும்’ சேவையினைத் தனது கொளத்தூர் கிளையில் அறிமுகப் படுத்தியுள்ளது.
தேசியப் பேரிடர் அபாயக் குறைப்புக்கானத் தளத்தின் (NPDRR) 3வது கலந்துரையாடல் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய இரயில்வே நிர்வாகமானது, தனது முழு நீள (3,825 கிமீ) அகலப்பாதை வலையமைப்பையும் 100 சதவீதம் மின் மயமாக்கி, தனது செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத் தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
பெங்களூரு நகரில் தேர்தல் செயல்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற உறுப்பினர்கள் இணைந்து வாக்களிப்பு விழா 2023 என்ற ஒரு பிரச்சாரத்தினைத் தொடங்கி வைத்தனர்.
G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் B20 (தொழில்கள்20) மாநாடு ஆனது சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் நடைபெற்றது.
ஜியானி இன்ஃபான்டினோ FIFA கூட்டமைப்பின் நான்கு ஆண்டுகாலத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார்.