இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், சர்வதேசப் பத்திரிக்கையான மத்திய வங்கிகள் என்ற பொருளாதார ஆய்வுப் பத்திரிகையின் 2023 ஆம் ஆண்டிற்கான 'ஆண்டின் சிறந்த ஆளுநர்' என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
2015 ஆம் ஆண்டில், முன்னாள் ஆளுநர் இரகுராம் ராஜன் முதன்முதலில் இந்தப் பட்டத்தினைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றார்.
இந்திய இரயில்வே நிர்வாகமானது 2030 ஆம் ஆண்டிற்குள், 'நிகர சுழியக் கார்பன் உமிழ்வினைக் கொண்ட நிறுவனம்' என்று மாறுவதற்கான இலக்கினை நிர்ணயித்து உள்ளது.
டாடா ஆலோசனை சேவை வழங்கீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கிருத்தி கீர்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.