TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 23 , 2023 486 days 270 0
  • சென்னை சிதம்பரம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'கலைஞர் கருணாநிதி காட்சி மேடை' கட்டிடத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமானது, லட்சத்தீவில் பசுமையான, சுய ஆற்றலில் இயங்கும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையினை நிறுவ உள்ளது.
    • இது குறை வெப்பநிலை வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடல்நீர் சுத்திகரிப்பு (LTTD) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லட்சத்தீவின் ஆறு தீவுகளுக்குக் குடிநீரை வழங்கும்.
  • பொது இடங்களில் புகைபிடிப்பதைக் குறைப்பதற்கும், அதன் மூலம் உருவாகும் தொற்றுநோய் சாராத நோய் உருவாக்கத்தின் அதிகரிப்பினை கணிசமான அளவில் குறைப்பதற்கும் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்காக பெங்களூரு நகரத்திற்கு ‘ஆரோக்கியமான நகரங்களுக்கான கூட்டாண்மை விருது’ ஆனது வழங்கப்பட்டது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதல் சுற்றுலா மற்றும் கலாச்சாரம் சார்ந்த தலைநகரமாக 'காசி' (வாரணாசி) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியானது, மத்தியப் பிரதேச அணியை வீழ்த்தி, தனது 30வது இரானி கிரிக்கெட் கோப்பையினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்