பட்டு வளர்ப்பு விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக ரேஷம் கீத் பீமா என்ற காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் மாறியுள்ளது.
ஸ்ரீநகரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டமான இந்திரா காந்தி நினைவு துலிப் மலர் தோட்டம் சமீபத்தில் திறக்கப்பட்டது.
இந்த தோட்டம் 1.5 மில்லியன் (15 லட்சம்) வகை மற்றும் வண்ண துலிப் மலர்களைக் கொண்டுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற உலக சிறு தானியங்கள் (ஸ்ரீஅன்னா) மாநாட்டினைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
சீனாவிற்கும் அருணாச்சலப் பிரதேசத்திற்கும் இடையிலான சர்வதேச எல்லையாக மெக்மோகன் கோட்டினை அங்கீகரிப்பதற்கான ஒரு தீர்மானத்தினை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.
குழந்தைகள் மற்றும் இளையோர்களுக்கான உலக நாடகத் தினமானது ஆண்டு தோறும் மார்ச் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரெஞ்சு மொழித் தினமானது 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
இந்தத் தினமானது கலாச்சார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான முகமை உருவாக்கப் பட்ட தினத்தினைக் குறிக்கிறது.