TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 27 , 2023 482 days 266 0
  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியானது, அங்கு அமைந்துள்ள 295 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், குறைந்தபட்சம் ஒரு திறன்மிகு வகுப்பறையினைப் பெற்ற தமிழகத்தின் முதல் சட்டமன்றத் தொகுதி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் அமைந்துள்ள மைதானத்திற்கு இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனையான இராணி ராம்பால் பெயர் சூட்டப்பட்டதன் மூலம் இந்தப் பெருமையைப் பெற்ற முதல் விளையாட்டு வீராங்கனை என்ற ஒரு பெருமையை அவர் பெற்றுள்ளார்.
  • ஜி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக ஐந்தாண்டு கால அதிபர் பதவி வகிக்க சீன நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.
  • சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) புதுடெல்லியில் சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் பகுதிசார் அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தினைத் திறந்துள்ளது.
  • இந்திய நாட்டினைச் சேர்ந்த 43 வயதான ரோகன் போபண்ணா ATP மாஸ்டர்ஸ் 1000 போட்டியில் வென்ற மிக வயதான வீரர் என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.
  • சர்வதேச வண்ணமயத் தினமானது, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்