TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 28 , 2023 481 days 245 0
  • வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் மற்றும் கேரள முதல்வர்கள் இணைந்து ஏப்ரல் 1ம் தேதி வைக்கம் நகரில் மாநில அளவிலானக் கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கின்றனர்.
  • கேரளாவின் பெண்கள் அதிகாரம் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டமான குடும்பஸ்ரீ என்ற திட்டம் 2023 ஆம் ஆண்டில் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது.
  • துபாயின் எமார் குழுமம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 60 மில்லியன் டாலர் செலவில் 'மால் ஆஃப் ஸ்ரீநகர்' என்ற பெயரில் வணிக மற்றும் அலுவலக வளாகத்தைக் கட்டவுள்ளது.
    • இந்த ஒன்றியப் பிரதேசத்தில் இது முதல் நேரடி அந்நிய முதலீடு (FDI) ஆகும்.
  • இந்திய வருமான வரித் துறையானது 'வரி செலுத்துவோருக்கான ஏஐஎஸ்' என்ற புதிய கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இது வரி செலுத்துவோர் தங்களது வருடாந்திரத் தகவல் அறிக்கையில் கிடைக்கும் தகவல்களைப் பார்க்க வசதியாக உள்ளது.
  • முழு அளவிலான மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியம் தொடர்பான மற்றும் உண்மை தொடர்பான உரிமைக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்