மும்பை இந்தியன்ஸ் மகளிர் கிரிக்கெட் அணி, மும்பையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியினை வீழ்த்தி முதலாவது மகளிர் கிரிக்கெட் பிரிமியர் லீக் கோப்பையைக் கைப்பற்றியது.
புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் டில்மா ரூசெஃப் "ஒருமனதாக" தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
ICICI லோம்பார்ட் பொதுக் காப்பீட்டு நிறுவனமானது, சுகாதாரக் காப்பீடு எடுத்த நபர்களுக்காக அத்தொழில்துறை சார்ந்த முதல் அம்சமான 'எந்தவொருப் பகுதியிலும் பணமில்லாச் சேவை' என்ற வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வாடிக்கையாளர்கள் தங்களது காப்பீட்டுப் பட்டியலில் பதிவு செய்யப்படாத மருத்துவமனைகளில் கூட பணமில்லாச் சேவை மூலமான வசதிகளைப் பெற வழி வகை செய்கிறது.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் அரசானது, பணியாள் சேர்ப்பு நிறுவனங்களுக்கும் மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்புத் தேடி அலையும் நபர்ர்களுக்கும் இடையிலான ஒரு இடைவெளியைக் குறைப்பதற்காக ஒரு எண்மத் தளமாகச் செயல்படுவதை ஒரு நோக்கமாகக் கொண்ட ‘ஜர்னியோஜன்’ என்ற தளத்தினைத் தொடங்கியுள்ளது.