இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், கேரளாவின் கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படையின் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிப் பள்ளியான ஐஎன்எஸ் துரோணாச்சார்யா என்ற பள்ளிக்கு மதிப்புமிக்க பிரஸிடெண்ட் கலர் என்ற விருதினை வழங்கினார்.
இது நாட்டிற்கு ஆற்றிய சிறப்பானச் சேவைக்காக ஓர் இராணுவப் பிரிவுக்கு வழங்கப் படும் ஒரு உயரிய கௌரவ விருது ஆகும்.
இந்தியத் தொழிலதிபரும், பெரும் புரவலருமான ரத்தன் டாடா, ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் (AO) பொதுப் பிரிவில் கெளரவ அதிகாரியாக நியமிக்கப் பட்டு உள்ளார்.
புத்தொழில் 20 எனப்படுகின்ற புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு ஈடுபாட்டுக் குழுவின் இரண்டாவது சந்திப்பானது, சிக்கிம் மாநிலத்தின் காங்டாக் நகரில் நடைபெற்றது.
G20 அமைப்பின் கீழ் நிலையான நிதிச் செயற்குழுவின் (SFWG) 2வது சந்திப்பானது ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் நடைபெற்றது.
ஒரு புதிய பிரபலத் தர மதிப்பீட்டு அறிக்கையின்படி, நடிகர் ரன்வீர் சிங் 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்கப் பிரபலமாக உருவெடுத்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி, அக்ஷய் குமார், ஆலியா பட், மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.