மஹாராஷ்டிராவின் நாக்பூர் மெட்ரோ ரயில் சேவையானது, மூன்று வெவ்வேறு பிரிவுகளுக்காக என்று மதிப்புமிக்க ஆசியா சாதனைப் புத்தகத்தின் சான்றிதழைப் பெற்றுள்ளது.
இரண்டு நாட்கள் அளவிலான G20 ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முன்னெடுப்பு கூட்ட (RIIG) மாநாடானது, அசாமின் திப்ருகர் நகரில் நடைபெற்றது.
ஒரு நிலையான மற்றும் சுழல்முறை உயிரிப் பொருளாதாரத்தினை உருவாக்கச் செய்வதற்கான வழிகளைப் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
G20 அமைப்பின் முதலாவது தலைமை அறிவியல் ஆலோசகர்கள் வட்டமேசை (G20-CSAR) மாநாடானது உத்தரகாண்ட் மாநிலத்தின் ராம்நகரில் நடைபெற்றது.
பல்வேறு நாடுகளின் தலைமை அறிவியல் ஆலோசகர்கள், G20 அமைப்பின் தளத்தில் வட்டமேசை மாநாட்டிற்காக ஒன்று கூடுவது இதுவே முதல் முறையாகும்.
ஒரு முக்கியச் சமூகவியலாளரான அலியா மிர் என்பவருக்கு, வளங்காப்பில் அவர் ஆற்றிய மகத்தான முயற்சிகளுக்காக வேண்டி ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேச நிர்வாகமானது வனவிலங்கு வளங்காப்பு விருதினை வழங்கியுள்ளது.
வைல்டுலைஃப் SOS என்ற அமைப்பிற்காகப் பணி புரியும் ஜம்மு மற்றும் காஷ்மீரினைச் சேர்ந்த முதல் பெண்மணியும், அந்தப் பகுதியிலிருந்து இந்த விருதினைப் பெற்ற முதல் பெண்மணியும் இவரே ஆவார்.
சார்க் நாடுகளின் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய அறக்கட்டளை (FOSWAL) ஆனது, பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு சிறப்பு இலக்கிய விருதினை வழங்கியுள்ளது.
அவரது The Unfinished Memoirs, The Prison Diaries and the New China 1952 ஆகிய மூன்று நாடகத் தொகுப்புகளுக்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.