கிம் காட்டன், சர்வதேச கிரிக்கெட் கழகத்தின் முழு அளவிலான இரண்டு உறுப்பினர் நாடுகளின் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஆடவர் போட்டியில் கள நடுவராகப் பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, கிம் 54 மகளிர் டி20 மற்றும் 24 மகளிர் ஒருநாள் போட்டிகளில் கள அளவிலான மற்றும் தொலைக்காட்சி நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
மனித - வனவிலங்கு மோதல் மற்றும் சகவாழ்வு குறித்த சர்வதேச மாநாடு ஆனது, ஐக்கியப் பேரரசின் ஆக்ஸ்போர்டு நகரில் நடைபெற்றது.
ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஆனது, ஹம்சா யூசுப்பை தனது முதல் அமைச்சராக நியமித்தது.
அவர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஓர் அரசாங்கத்தில் இடம் பெறுகின்ற இளம் மற்றும் முதலாவது முஸ்லீம் தலைவர் ஆவார்.