TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 15 , 2023 463 days 229 0
  • இடஞ்சார்ந்த பேரிடர் எச்சரிக்கைகள், இடி, மின்னல், மழை மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு பற்றியத் தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கும் வகையிலான TN-Alert என்ற கைபேசிச் செயலியினைத் தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
  • MF ஹைட்ரா எனப்படும் மின்கலங்கள் மற்றும் திரவ ஹைட்ரஜன் எரிபொருள் கலங்களைப் பயன்படுத்துகின்ற கலப்பினத் தொழில்நுட்பம் அடிப்படையிலான ஒரு கப்பலானது, சமீபத்தில் நார்வேயில் தனது இரண்டு வார அளவிலான கடல் பயணச் சோதனைகளை நிறைவு செய்தது.
  • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உகாண்டாவின் கம்பாலாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது 'துளசி கணவாய் பகுதி மறுசீரமைப்பு' எனும்  ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • ரக்கூன் ஸ்டீலர் எனப்படும் மின்னஞ்சல் மூலமாக தகவலைத் திருடும் ஒரு தீம் பொருளானது எட்டு மத்திய அரசு நிறுவனங்களைத் தாக்கச் செய்வதை இலக்காக கொண்டது.
    • இது பாதிக்கப்பட்ட கணினிகளிலிருந்து முக்கியமான பல தகவல் தரவுகளைத்  திருடும் ஒரு  தீம்பொருள்  ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்