சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து நிலையம்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளது.
அசாமில் கௌகாத்திக்கு அருகிலுள்ள சாங்சாரி என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள, வடகிழக்கு இந்தியாவின் முதல் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்) ஆனது சமீபத்தில் திறக்கப்பட்டது.
இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் D. குகேஷ், உலக சதுரங்க ஆர்மகெடான் ஆசியா & ஓஷானியா போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
அஜ்மீர் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் விரைவு இரயில் சேவையானது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
ஐதராபாத்தில் அமைக்கப் பட்டுள்ள B. R. அம்பேத்கர் அவர்களின் 125 அடி உயரம் கொண்ட வெண்கலச் சிலையைத் தெலுங்கானா முதல்வர் திறந்து வைத்தார்.
இது இந்தியாவில் அம்பேத்கரின் மிகவும் உயரமான சிலையாகும்.
பாரத் பயோடெக் நிறுவனமானது, அமெரிக்காவின் வாசிங்டன்னில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு உலகத் தடுப்பூசி மாநாட்டில் சிறந்தத் தடுப்பூசி தொழில்துறை (ViE) விருதுகளின் ஒரு பகுதியாக `சிறந்த உற்பத்தி / செயல்முறை மேம்பாடு’ என்ற பிரிவில் விருதினை வென்றுள்ளது.