உச்ச நீதிமன்றத்தில் கண்ணியமிகுப் பணிச்சூழல் நிலவுவதை உறுதி செய்வதற்காக, அந்த வளாகத்திற்குள் உள்ள LGBTQIA+ சமூகத்திற்கு ஏற்ற வகையிலான உள்ளார்ந்த உள்கட்டமைப்பு மற்றும் பாலின உணர்வுகள் சார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தச் செய்வதற்கான நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி பாலின உணர்வுகள் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் உள்ளரங்கப் புகார்க் குழுவின் ஒரு உறுப்பினராகச் சேர்க்கப் பட்டுள்ளார்.
மத்திய ஆயுதக் காவல் படையின் (CAPF) காவலர் பணிக்கான தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்விற்கான வினாத்தாள் ஆனது அசாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கணி ஆகிய மொழிகளில் அமைக்கப்படும்.
G20 நாடுகளின் தலைமை வேளாண் அறிவியலாளர்களின் (MACS) ஒரு கூட்டமானது, வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையினால் வாரணாசியில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
உலக குரல் தினம் என்பது நமது அன்றாட வாழ்வில் குரலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக என்று ஆண்டுதோறும் ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று அனுசரிக்கப் படும் ஒரு நிகழ்வாகும்.