அசாம் மாநிலமானது, ஒரே இடத்தில் 11000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் 'பிஹு' நடனம் ஆடியும் மற்றும் முரசுக் கலைஞர்கள் 'தோல்' எனப்படும் முரசினை வாசித்ததன் மூலமும் வரலாறு ஒன்றைப் படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
MRF லிமிடெட் நிறுவனமானது, மிச்சிலின் பிரெஞ்சு டயர் நிறுவனத்திற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது வலுவான உருளிப்பட்டை (டயர்) தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய டயர் உற்பத்தி நிறுவனம் இது ஆகும்.
அமெரிக்கக் கூட்டாட்சி வான்வழிப் போக்குவரத்து நிர்வாக அமைப்பின் சர்வதேச விமானப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பிரிவு I என்ற தகுதியினை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.
உலகளாவிய நிதிக் கட்டமைப்பின் சீர்திருத்தம் தொடர்பான காமன்வெல்த் மாநாட்டிற்கான நிதி அமைச்சர்கள் பணிக் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைமைப் பொறுப்பினை இந்தியாவும், துணைத் தலைமைப் பொறுப்பினை நைஜீரியாவும் ஏற்க உள்ளன.