TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 20 , 2023 458 days 249 0
  • அசாம் மாநிலமானது, ஒரே இடத்தில் 11000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் 'பிஹு' நடனம் ஆடியும் மற்றும் முரசுக் கலைஞர்கள் 'தோல்' எனப்படும் முரசினை வாசித்ததன் மூலமும் வரலாறு ஒன்றைப் படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
  • MRF லிமிடெட் நிறுவனமானது, மிச்சிலின் பிரெஞ்சு டயர் நிறுவனத்திற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது வலுவான உருளிப்பட்டை (டயர்) தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
    • முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய டயர் உற்பத்தி நிறுவனம் இது ஆகும்.
  • அமெரிக்கக் கூட்டாட்சி வான்வழிப் போக்குவரத்து நிர்வாக அமைப்பின் சர்வதேச விமானப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பிரிவு I என்ற தகுதியினை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • உலகளாவிய நிதிக் கட்டமைப்பின் சீர்திருத்தம் தொடர்பான காமன்வெல்த் மாநாட்டிற்கான நிதி அமைச்சர்கள் பணிக் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைமைப் பொறுப்பினை இந்தியாவும், துணைத் தலைமைப் பொறுப்பினை  நைஜீரியாவும் ஏற்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்