தமிழக அரசானது, இந்த ஆண்டில் ஆளுநருக்கான விருப்புரிமை நிதி ஒதுக்கீட்டினை 5 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாக குறைக்கவுள்ளது.
தமிழ்நாடு அரசானது, 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 21/2012) திருத்தியமைப்பதற்கான மசோதாவினை சட்ட சபையில் தாக்கல் செய்துள்ளது.
இது துணைவேந்தரை நியமிப்பதற்கான அதிகாரத்தினை மாநில ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசிடம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழகத்தின் உச்ச கட்ட மின் தேவையானது, ஏப்ரல் 19 ஆம் தேதியன்று 19,087 மெகா வாட் என்ற அளவினை எட்டி முதன்முறையாக 19,000 மெகாவாட் என்ற அளவினைத் தாண்டியது.
இந்தியத் தேர்தல் ஆணையமானது, எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அ.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான டிம் குக், இந்தியாவின் முதல் ஆப்பிள் தயாரிப்புகளின் சில்லறை விற்பனைக் கடையை மும்பையில் தொடங்கி வைத்தார்.