TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 26 , 2023 452 days 240 0
  • முன்னதாக, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரி என்றறியப்பட்ட சென்னையில் திருவல்லிக் கேணியில் அமைந்துள்ள வெல்லிங்டன் சீமாட்டி மேம்பாட்டுக் கல்வியியல் நிறுவனம், அதன் நூற்றாண்டு விழாவினை சமீபத்தில் கொண்டாடியது.
    • 1922 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட இந்தக் கல்லூரியின் முதல் கல்வியாண்டு மாணவர்கள் 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பட்டம் பெற்றனர்.
  • "இந்தியா ஸ்டீல் 2023" எனப்படும் சர்வதேசக் கண்காட்சி மற்றும் மாநாடானது மும்பை நகரில் நடைபெற்றது.
  • டாடா எஃகு உற்பத்தி நிறுவனமானது, 2023 ஆம் ஆண்டு எஃகு நிலைத்தன்மையில் முதன்மையான நிறுவனங்களின் ஒரு பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக தனது பெயரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • கேரளாவில் எருமேலி என்னுமிடத்தில், சபரிமலை பசுந்தட விமான நிலையம் அமைப்பதற்கான திட்டத்திற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்