நான்கு நாட்கள் அளவிலான பறவைகள் கணக்கெடுப்பில் 10,000க்கும் மேற்பட்ட பட்டியல்கள் பதிவேற்றப்பட்டதன் மூலம், 2023 ஆம் ஆண்டு கிரேட் பேக்யார்டு (Great Backyard) என்ற பறவைகள் கணக்கெடுப்பில் சேலம் மாவட்டம் ஒரு முன்னணிப் பங்கேற்பாளராக திகழ்கிறது.
1963 ஆம் ஆண்டில் மாநில அந்தஸ்து பெற்ற நாகாலாந்து, முதல்முறையாக மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கான அனுமதியினைப் பெற்றுள்ளது.
இந்தியன் வங்கிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட 2022-23 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான EASE சீர்திருத்தக் குறியீட்டு அறிக்கையின்படி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா முதன்முறையாக இதில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.