TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 29 , 2023 577 days 310 0
  • ‘பிரதான் மந்திரி கதிசக்தி தேசிய முதன்மைத் திட்டத்தினை’ வெற்றிகரமாகச் செயல் படுத்தியதற்காக தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறைக்கு 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்தப் பொது நிர்வாகத்திற்கான பிரதம மந்திரியின் விருது என்பது வழங்கப்பட்டுள்ளது.
  • அமர ராஜா குழுமத்தின் ஆதரவு பெற்ற Log9 மெட்டீரியல்ஸ் என்ற ஒரு நிறுவனமானது, பெங்களூருவில் இந்தியாவின் முதல் லித்தியம்-அயன் மீதான ஒரு மின்கல உற்பத்தி நிலையத்தினை தொடங்கியுள்ளது.
  • இந்தியா மற்றும் ஜமைக்கா நாட்டின் மத்திய வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர்கள் இணைந்து கயானாவின் ஜார்ஜ் டவுனில் நடைபெற்ற 4வது இந்தியா-CARICOM அமைச்சர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
    • கரீபியன் சமூகம் (CARICOM) என்பது 15 உறுப்பினர் நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார ஒன்றியம் ஆகும்.
  • 1727 ஆம் ஆண்டில் பிறந்த பிரபல பிரெஞ்சு நாட்டு நடனக் கலைஞரான ஜீன் ஜார்ஜஸ் நோவர்ரேவின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று சர்வதேச நடன தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்