TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 30 , 2023 448 days 224 0
  • தமிழக அரசு சமையல் எரிவாயு  உருளைகளை அரசு நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய  முடிவு செய்துள்ளது.
    • 5 கிலோ மற்றும் 10 கிலோ வர்த்தகச்  சிலிண்டர்களை தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையானது  ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது.
  • சென்னை ஐஐடி வளாகத்தில் துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான ஒரு தேசியத் தொழில்நுட்ப மையத்தை (NTCPWC) மத்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானாந்தா சோனோவால் திறந்து வைத்தார்.
  • பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான மூன்று நாள் சர்வதேச மாநாடு (ICDFE-2023) புது தில்லியில் நடைபெற்றது.
  • கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (OPEC) நாடுகளின் பங்கு 2022-23 ஆண்டில் மிக  வேகமாகக்  குறைந்து கொண்டு வருகிறது.
  • சர்வதேச ஜாஸ் தினமானது, ஜாஸ் இசை மூலம் உலகின் அனைத்து மூலைகளிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் அதன் அரசுமுறை சார்ந்தப் பங்கினை முன்னிலைப் படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 30 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்