தமிழக அரசு சமையல் எரிவாயு உருளைகளை அரசு நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
5 கிலோ மற்றும் 10 கிலோ வர்த்தகச் சிலிண்டர்களை தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையானது ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது.
சென்னை ஐஐடி வளாகத்தில் துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான ஒரு தேசியத் தொழில்நுட்ப மையத்தை (NTCPWC) மத்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானாந்தா சோனோவால் திறந்து வைத்தார்.
பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான மூன்று நாள் சர்வதேச மாநாடு (ICDFE-2023) புது தில்லியில் நடைபெற்றது.
கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (OPEC) நாடுகளின் பங்கு 2022-23 ஆண்டில் மிக வேகமாகக் குறைந்து கொண்டு வருகிறது.
சர்வதேச ஜாஸ் தினமானது, ஜாஸ் இசை மூலம் உலகின் அனைத்து மூலைகளிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் அதன் அரசுமுறை சார்ந்தப் பங்கினை முன்னிலைப் படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 30 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.