ரத்தன் டாடாவுக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயரியக் குடிமை விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியத் தொழில்முறை மலையேறும் வீரரான அர்ஜுன் வாஜ்பாய், அன்னபூர்ணா 1 என்ற சிகரத்தின் உச்சியினை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்று உள்ளார்.
இது நேபாளத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,091 மீட்டர் (26,545 அடி) உயரத்தில் அமைந்துள்ள உலகின் 10வது உயரமான சிகரமாகும்.
WYLD எனப்படும் விசா நிறுவனத்தின் ஆதரவினைப் பெற்ற உலகின் முதல் சமூகப் பயன்பாட்டுப் பண வழங்கீட்டு அட்டையானது மும்பையில் அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது.
கொலம்பிய நாட்டுப் பாடகி ஷகிரா, பில்போர்டு இதழின் 'ஆண்டின் சிறந்த இலத்தீன் பெண்மணி' என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.
துபாய் நாட்டினைச் சேர்ந்த விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஆனது, சாரா எனப்படும் உலகின் முதல் எந்திர மனிதச் செயல்பாடு சார்ந்த ஒரு உள்நுழைவு வசதியினைத் தொடங்கியுள்ளது.
சாரா என்பது வாடிக்கையாளர்களின் முகங்களை ஊடறிந்து செய்யப்பட்ட கடவுச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு, பயணிகளின் பட்டியலைச் சரிபார்த்து, பின் அவர்களைச் சுமைகளை உள்ளிடும் முனையப் பகுதிக்கு அவர்களை வழிநடத்தும்.