2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாரா கடன் ஆனது 27,669.88 கோடி ரூபாயாக உள்ளது.
2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில், இந்தத் தொகை 15,368.91 கோடி ரூபாயாக இருந்தது.
குறிப்பிட்டத் தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை நீட்டிக்கும் வகையிலான, 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தினை திருத்தியமைக்கும் தமிழ்நாடு மாநில அரசின் சமீபத்திய சர்ச்சைக்குரிய மசோதா திரும்பப் பெறப்பட்டது.
இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஏப்ரல் மாதத்தில் 1,87,035 கோடி என்ற அதிகபட்ச அளவினை எட்டியது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலான அதிகபட்ச வரித் தொகையான 1.67 லட்சம் கோடியை விட இது 12% அதிகமாகும்.
பிரதமர் மோடி அவர்களின் பிரபலமான வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் 100 அத்தியாயங்களை நிறைவு செய்துள்ளது.
‘ஜன சக்தி’ என்ற தலைப்பிலான ஒரு கண்காட்சியானது, புது டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக் கூடத்தில் (NGMA) சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இந்தக் கண்காட்சியில் பன்னிரண்டு புகழ்பெற்ற நவீன கால மற்றும் சமகால இந்தியக் கலைஞர்களின் கலைப் படைப்புகளைக் காட்சிப் படுத்தப் படுகிறது.
ITC நிறுவனமானது ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தினைப் பின்னுக்குத் தள்ளி, தற்போது சந்தை மூலதனத்தின் அடிப்படையில், இந்தியாவின் ஆறாவது பெரிய நிறுவனமாக மாறியுள்ளது.