TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 6 , 2023 442 days 269 0
  • சுமார் 35,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் தொழில்துறை சார் திட்டங்களுக்குத் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
  • 2023 முதல் 2033 ஆம் ஆண்டு வரையில், ஆடவர் மற்றும் மகளிர் இந்திய ஹாக்கி அணிகளுக்கு (மூத்தப் பிரிவினர் மற்றும் இளையோர்) தனது நிதியளிப்பினை மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு ஒடிசா அரசாங்கமானது முடிவு செய்துள்ளது.
  • கோ ஏர்லைன்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனமானது (Go First), தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLT) தன்னார்வ திவால் நடவடிக்கைகளுக்காக தாக்கல் செய்து உள்ளது.
  • "செயற்கை நுண்ணறிவின் ஞானப் பிதா" என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்தில் வகித்த  தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
  • வோடபோன் குழுமமானது இத்தாலி நாட்டினைச் சேர்ந்த மார்கெரிட்டா டெல்லா வாலேவை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்