அரை நூற்றாண்டுக்கும் மேலாக கர்நாடக இசை உலகில் ஒரு மிருதங்க வாசிப்பாளராக ஆதிக்கம் செலுத்தி வந்த காரைக்குடி R.மணி சமீபத்தில் சென்னையில் காலமானார்.
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஒன்றியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள NAMO மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது சமீபத்தில் திறந்து வைக்கப் பட்டது.
இந்திய இராணுவமானது, ஆயுதப் படைகளில் பெண்களின் பங்கினை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் "ஐந்து பெண் அதிகாரிகள்" அடங்கிய முதல் படைத் தொகுதியினை பீரங்கிப் படையில் சேர்த்துள்ளது.
புகழ்பெற்ற இயற்பியலாளரும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) இயக்குநருமான அஜித் குமார் மொஹந்தி அணுசக்தி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
ரஷ்யாவின் ஸ்பெர்பேங்க் என்ற நிறுவனமானது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ChatGPT மற்றும் கூகுள் நிறுவனத்தின் பார்டு ஆகியவற்றிற்குப் போட்டியாக GigaChat என்ற தனது சொந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருளினை அறிமுகப் படுத்தியுள்ளது.