TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 11 , 2023 437 days 238 0
  • இந்திய இராணுவத்தின் தெற்குப் படைப்பிரிவின் தலைமையகமானது குடிமைப் பணிச் சேவை அமைப்புகள் 32 உள்ளிட்ட 56 தீயணைப்பு அமைப்புகளுடன் இணைந்து, ‘அக்னி தமன் – 23’ என்ற ஒரு நாள் அளவிலான பயிற்சியினை மேற்கொண்டது.
  • இரயில்வே அமைச்சகமானது, பொதுமக்களின் புகார்கள் மற்றும் குறைகளை வெகு விரைவாக நிவர்த்தி செய்வதற்காக என்று முதன்முறையாக டெல்லியில் புதிய அவசர நடவடிக்கை அணுகல் அறையினை அமைத்துள்ளது.
  • 1929 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, 94 ஆண்டுகள் மிகப் பழமையான இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையினை மறுசீரமைப்பதற்காக, சஞ்சய் கார்க் தலைமையிலான 11 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளது.
  • மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய உயிரி எரிவாயு உற்பத்தி ஆலையினை அமைப்பதற்காக பிரிஹன் மும்பை மாநகராட்சிக் கழகம் மற்றும் மஹாநகர் கேஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவை கை கோர்த்துள்ளன.
  • மத்திய எல்லைச் சாலைகள் அமைப்பானது, “ஏக்தா ஏவம் ஷ்ரதாஞ்சலி அபியான்”, என்ற ஒரு பெயரில், தேசத்தினைக் கட்டியெழுப்பச் செய்வதில் அதன் கர்மயோகிகளின் (பணியாளர்களின்) தியாகங்கள் மற்றும் பங்களிப்பினை நினைவு கூரும் வகையில் ஒரு பல்முனைப் பயணத்தினை ஏற்பாடு செய்துள்ளது.
  • முன்னதாக அகில இந்திய வானொலி (AIR) என்று அழைக்கப்பட்ட பொது ஒலிபரப்பு நிறுவனமானது அனைத்து ஒலிபரப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் ஆகாஷ்வானி என்று பிரத்தியேகமாக குறிப்பிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ஆகாஷ்வானி என்ற பெயர் 1956 ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலி நிறுவனத்தினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • Love in 90’s என்ற ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் (முன்னோட்டத் தொகுப்பு) ஆனது புது டெல்லியில் வெளியிடப்பட்டது.
    • அருணாச்சலப் பிரதேசத்தின் டேகின் சமூகத்தினர் குறித்த முதல் திரைப்படம் இது ஆகும்.
  • ஐக்கிய அரபு அமீரக அரசாங்கமானது, துபாயில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான சர்வதேச மாநாடான ‘Machines Can See 2023’ என்ற உச்சி மாநாட்டினைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்