TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 14 , 2023 434 days 250 0
  • தெலுங்கானாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புத்தாக்க ஊக்குவிப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவு மையம் (C-i2 RE) சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
  • மத்திய அரசானது, SAKSHAM (நிலையான சுகாதார மேலாண்மைக்கான மேம்பட்ட தகவல் திறனைத் தூண்டுதல்) எனப்படும் ஒரு கற்றல் மேலாண்மைத் தகவல் அமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இது நாட்டில் உள்ள அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் வேண்டி இயங்கலை வழிப்பயிற்சி மற்றும் மருத்துவக் கல்வியை வழங்கச் செய்வதற்கான ஒரு பிரத்தியேகமான மற்றும் ஒருங்கிணைந்தத் தளமாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பானது ஆண்டிற்கு 34.22 டன் என்ற வீதத்தில் அதிகரித்து 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 794.64 டன் என்ற அளவினை எட்டியது.
    • இந்திய ரிசர்வ் வங்கியானது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 760.42 மெட்ரிக் டன் தங்க இருப்பினை (11.08 மெட்ரிக் டன் தங்க வைப்புகள் உட்பட) கொண்டிருந்தது.
  • உலகின் மிகப்பெரிய மற்றும் முதலாவது முகமை அடிப்படையிலான சதுரங்க லீக் போட்டியானது துபாயில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்