TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 16 , 2023 560 days 267 0
  • GMR ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் ஆனது 90.43 சதவிகிதம் வரையில் மிகவும் சரியான ஒரு நேரத்தில் செயல்படுவதனால் உலகிலேயே மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • வாரணாசியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையமானது, இந்தியாவிலேயே முதன்முதலாக வாசிப்பு அறையை நிறுவியுள்ளது.
  • "Droupadi Murmu: From Tribal Hinterlands to Raisina Hills" என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தினை கஸ்தூரி ரே எழுதியுள்ளார்.
  • ‘The Indian Metropolis: Deconstructing India’s Urban Spaces’ என்ற புத்தகத்தினை ஃபெரோஸ் வருண் காந்தி எழுதியுள்ளார்.
  • காஷ்மீர் பல்கலைக்கழகம் ஆனது பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு நாட்கள் அளவிலான இளையோர் 20 என்ற நிகழ்ச்சியினை (Y20) நடத்தவுள்ளது.
    • இந்த இளையோர் 20 நிகழ்வின் கருத்துரு, "பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு: நிலைத்தன்மையை வாழ்க்கை முறையாக்குதல்" என்பதாகும்.
  • வங்காளதேச அரசானது சமீபத்தில் 6வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டினை (IOC) நடத்தியது.
  • சீன அதிபர் ஜி ஜின்பிங் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் (கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்) தலைவர்களுடன் இணைந்து இரண்டு நாட்கள் அளவிலான உச்சி மாநாட்டினை நடத்த உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்