5வது உலக ஆயுர்வேத திருவிழாவானது (GAF-2023) கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இந்திய வானியல் சங்கத்தினால் (ASI) நிறுவப்பட்ட முதல் கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதானது மூத்த வானியலாளர் ஜெயந்த் நராலிகருக்கு வழங்கப் பட்டு உள்ளது.
மத்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம் ஆனது கொச்சின் துறைமுக ஆணையத்திற்கு (CPA), 2022-23 ஆம் ஆண்டில் கொள்கலன் சாராத சரக்குப் போக்குவரத்துப் பிரிவில் சிறந்த செயல்முறை நேர மேலாண்மைக்கான சாகர் ஷ்ரேஷ்த சம்மான் விருதினை வழங்கியுள்ளது.
இந்தியக் கால்பந்து ஜாம்பவான் மற்றும் 1960 ஆம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியில் அணித் தலைவராக இருந்த பிரதீப் குமார் பானர்ஜியின் பிறந்த நாள் (ஜூன் 23) ஆனது, அகில இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்பு (AIFF) அடித்தளத்தின் தினமாக கொண்டாடப் பட உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் காடுகளுக்கான மன்றத்தின் 18வது அமர்வு (UNFF18) ஆனது நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.