மத்திய அரசானது, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதியம் தொடர்பான பல வழக்குகளைத் தீர்ப்பதற்காக வேண்டி டெல்லியில் 8வது அகில இந்திய ஓய்வூதிய அதாலத்தினைத் தொடங்கி வைத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பானது, (WHO) சர்க்கரை சாராத இனிப்பேற்றிகள் (NSS) குறித்த ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்லது தொற்றா நோய்களின் (NCDs) அபாயத்தினைக் குறைப்பதற்காக வேண்டி சர்க்கரை சாராத இனிப்பேற்றிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அணித்தலைவர் பிரதிமா புல்லர் மால்டோனாடோ நியூயார்க் காவல் துறையில் உயர் நிலைப் பதவியில் உள்ள (NYPD) தெற்காசியப் பெண்மணி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.